தேங்காய் பால் சாதம் (3)
0
தேவையான பொருட்கள்:
பிரிஞ்சு இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 கீறியது
அரிசி - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
முந்திரி - 5
நெய் - ஒரு குழிக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
செய்முறை:
குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், முந்திரி போட்டு பொரிய விடவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்போது தேங்காய் பால் சேர்த்து கொதி வந்ததும், கழுவிய அரிசி, உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.