தேங்காய் பால் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

இஞ்சி விழுது - கால் தேக்கரண்டி

தேங்காய் பால் - ஒரு கப்

கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க

காய்ந்த மிளகாய் - ஒன்று (தாளிக்க)

உளுந்து, கடலை பருப்பு, முந்திரி - தாளிக்க

எண்ணெய், நெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு ஏற்ப

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும்.

பத்து நிமிடம் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து சிறுதீயில் இரண்டு நிமிடம் உடையாமல் வதக்கவும்.

தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர், உப்பு, இஞ்சி விழுது சேர்த்து கொதி வந்ததும் ஒரு விசில் வைத்து இறக்கி, பரத்தி ஆற விடவும்

எண்ணெய், நெய் கலவையில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பருப்புகள், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்ததை பரத்திய சாதத்துடன் கலந்து நன்கு பரவ கலந்து விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: