தேங்காய் சாதம் (7)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
தேங்காய் - 1 மூடி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பொரித்த அப்பளம் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் தே.எண்ணெய், உப்பு கல்ந்து, ஆற விடவும்.
தேங்காயை நைசாக துருவி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, முந்திரி சேர்த்து, சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
ஆறிய சாதத்துடன் கலக்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பொடித்த அப்பளம் தூவி கிளறவும்.