தேங்காய் சாதம் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - 1.5 கப்

பாசுமதி அரிசி - ஒரு கப்

நெய் - 3 தேக்கரண்டி

பட்டை - 2

கிராம்பு - 4

ஏலக்காய் - 5

நறுக்கிய கொத்தமல்லி , புதினா - சிறிதளவு

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 15

கீறிய பச்சை மிளகாய் - 2

நீளமாக நறுக்கிய பூண்டு - 3 பல்

செய்முறை:

பாசுமதி அரிசியை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவிட்டு பின் வடிக்கவும்.

பெரிய கடாயில் நெய்யை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு போட்டு கொதித்ததும் வடித்த அரிசியை போடவும்.

அதிகமான தீயில் 10 நிமிடம் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் வற்றத் தொடங்கி பாலை அரிசி இழுத்து ட்ரையாக தொடங்கும்.

இப்பொழுது தீயை குறைத்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.

கடைசி 5 நிமிடத்திற்கு முன் கொத்தமல்லி, புதினா போட்டு ஒரு கிளறு கிளறி விட்டு மேலும் 5 நிமிடம் மூடி வைத்த பின் சூடான தேங்காய் சாதத்தை பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை விருந்து சமயத்தில் அல்லது விஷேச சமயத்தில் குருமா வகைகள், ரைய்தா, மீன் குழம்பு வகைகளுடன் பரிமாற அருமையாக இருக்கும். இதில் பெஸ்ட் காம்பினேஷன் மட்டன் குருமா, புதினா சட்னி, அப்பளம், ஸ்வீட்.