தேங்காய் சாதம் (3)
0
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 1 கப்
தேங்காய்துருவல் - 1 கப்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
பொரித்த அப்பளம் - 3
செய்முறை:
பாஸ்மதி அரிசியை உதிரியான சாதமாக வேக வைக்கவும்.
பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் தாளிக்கவும்.
தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆறிய சாதத்தை சேர்த்து வறுக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துப்போடவும். பொரித்த அப்பளங்களை நொறுக்கிப்போட்டு பரிமாறவும்