தேங்காய் சாதம் (2)
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
இஞ்சி - ஒரு துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
பச்சைமிளகாய் - பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - 6 இலைகள்
முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்.
எதுவும் நிறம் மாற தேவையில்லை. பிறகு தீயை அணைத்து விட்டு உடன் தேங்காய் துருவல் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்
குறிப்புகள்:
இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன். இதில் வெங்காயம், இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்.