தேங்காய்ப் பால் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
நன்றாக முற்றிய தேங்காய் - ஒன்று
பச்சரிசி - ஒரு லிட்டர்
டால்டா - 50 கிராம்
நெய் - 50 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
முழு பூண்டு - ஒன்று
தக்காளி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பட்டை - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - ஒரு தேக்கரண்டி
புதினா - தாளிப்பதற்கு கொஞ்சம்
மல்லித்தழை - தாளிப்பதற்கு கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் தேங்காயை துருவி கிரைண்டரில் அரைத்து இரண்டு லிட்டர் அளவு பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி நீரை வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பை பொடி செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து டால்டா, நெய் இரண்டையும் ஊற்றி பட்டை, கிராம்பு, அரைத்த விழுது, வெங்காயம், தக்காளி, புதினா, மல்லி எல்லாவற்றையும் போட்டு சிவக்க தாளிக்கவும்.
நன்கு வதக்கிய பின்பு தேங்காய் பாலினை ஊற்றி உப்பு தேவையான அளவு போட்டு மூடி விடவும்.
நன்கு பால் கொதித்தவுடன் கழுவிய அரிசியை கொட்டி நன்கு கிளறி விடவும்.
இரண்டு முறை கிளறி விட்ட பின்பு அப்படியே மூடி தம்மில் போட வேண்டும்.