தேங்காய்ப் பால் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னி பச்சரிசி - இரண்டு கப்

தேங்காய் - ஒன்றரை மூடி

வெந்தயம் - இரண்டு டீ ஸ்பூன்

நெய் - 3 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்

உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேன்டும்

தேங்காயை பிழிந்து பால் எடுத்து தண்ணிருடன் கலந்து மூன்றரை கப் தயாரிக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி வெந்தயம் போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை , மஞ்சள் பொடி பொட்டு கலந்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும். பால் கலவை நுரைத்து வரும் நேரம் உப்பு,ஊற வைத்த அரிசியை போட்டு குக்கரை மூடி வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து திறக்கவும்.

குறிப்புகள்:

இந்த தேங்காய்ப் பால் சாதம் பச்சை கறுவேப்பிலை துவையலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.