தேங்காய்பால் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 டம்ளர்
தேங்காய் பால் - 4 டம்ளர்
கறிவேப்பிலை - 2 கொத்து
ஏலக்காய் - 2
பட்டை- ஒரு துண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
எண்ணெய் அல்லது நெய் - தாளிக்க தகுந்தபடி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை சேர்த்து, வெடித்து முடித்ததும் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்த பின் களைந்த அரிசியை கொட்டி உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.
15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது திறந்தால் போதும்.
குறிப்புகள்:
கறிவேப்பிலை தான் இதற்கு வாசம் கொடுப்பது. தேங்காய் முதல் பால் தான் உபயோகிக்க வேண்டும். தரமான அரிசியில் செய்யலாம். பாஸ்மதி தேவையில்லை.வெங்காய ரெய்தா, கோழி குழம்பு,கிரேவி இவைகளோடு சேர்த்து சாப்பிட சுவை கூடும்.