தேங்காய்பால் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்

தேங்காய்பால் - 1 1/2 டம்ப்ளர்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவைக்கு

-----------------------------

தாளிக்க:

-------------------------------

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 2 அல்லது 3

ஏலக்காய் - ஒன்று

நெய் மற்றும் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 20 - 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை

லவங்கம்

ஏலக்காய் போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து

தேங்காய் பாலும் சேர்க்கவும்.

குக்கரை மூடி ஒரு விசில் வந்து

2 நிமிடங்கள் ஆகும் வரை வேக வைத்து பின்னர் நிறுத்தவும்.

சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயார். இதனுடன் எல்லா வெஜ் மற்றும் நான் வெஜ் கிரேவிகள்

ரைத்தா நன்கு பொருந்தும். பார்ட்டிகளின் போது தயாரிக்க கூடிய எளிய உணவு.

குறிப்புகள்: