துவரம்பருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 டம்ளர்

துவரம்பருப்பு - 1/4 டம்ளர்

புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்)

அரைக்க வேண்டிய பொருட்கள்:

சிவப்பு மிளகாய் - 6

முற்றிய தேங்காய் துருவியது - 1 கப்

சின்ன வெங்காயம் - 9

பூண்டு பல் - 3

சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து, குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரில் அரைத்தமசாலாவைக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மசாலா கலந்த புளியை ஊற்றி, கொதிக்க விடவும். வெந்த பருப்பு சாதத்தில் இதை நன்கு கலக்கவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.

குறிப்புகள்:

தொட்டுகொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடகம் பொருத்தமாக இருக்கும். குறிப்பு- மிளகாய் அளவு, (காரம் குறைவாக வேண்டும் என்றால் குறைத்துக் கொள்ளலாம்)