தாளித்த மோர் சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - இரண்டு கோப்பை

மோர் - இரண்டரை கோப்பை

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - நான்கு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி, உப்புச் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு மலர வேகவைத்துக் கொள்ளவும். பின்பு அதை கரண்டியால் சிறிது மசித்து வைக்கவும்.

மோரை நன்கு கரைத்து உப்புத்தூளை போட்டு கலக்கி வைக்கவும்.

பிறகு சட்டியில் எண்ணெயை காய வைத்து முதலில் கடுகைப் போட்டு வெடித்ததும் மற்ற தாளிப்பு பொருட்களைப் போட்டு வறுத்து மஞ்சள்தூளையும், பெருங்காயத்தூளையும் போட்டு கலக்கி மோரை எடுத்து அதில் கொட்டி இறக்கி வைக்கவும்.

பிறகு தாளித்த மோரை மசித்த சோற்றில் கொட்டி நன்கு கலக்கி விட்டு பரிமாறவும். இந்த மோர் சோற்றுக்கு உருளைக்கிழங்கு வறுவல் நல்ல சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: