தயிர் சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி(அ)புழுங்கலரிசி - இரண்டு கோப்பை

பசும் பால் - ஒரு கோப்பை

தயிர் - அரைக்கோப்பை

வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

இஞ்சி - அரை அங்குலத்துண்டு

பச்சைமிளகாய் - இரண்டு

காய்ந்தமிளகாய் - இரண்டு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

பெருங்காயம் - கால்தேக்கரண்டி

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி ஐந்து கோப்பை நீரைச் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

பிறகு குழையவைத்த சோற்றில், சூடாக காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.

பிறகு பால் சோறு சிறிது ஆறியவுடன் தயிரை ஊற்றி நன்கு கலக்கவும். தொடர்ந்து நறுக்கிய பச்சைமிளகாய், துருவிய இஞ்சி, உப்புத்தூள் மற்றும் கறிவேப்பிலையை உருவி போட்டு நன்கு கலக்கி விடவும்.

பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி, குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும்.

அடுத்த நாள் தேவைப்படும்பொழுது வெளியே எடுத்து வெண்ணெயைப் போட்டு குழைய கலக்கி விடவும்.

பின்பு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு பெருங்காயத்தையும் போட்டு தாளித்து தயிர் சோறின் மீது கொட்டவும். இலேசாக கிளறி கொத்தமல்லியை தூவி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: