தயிர் சாதம் (2)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
தயிர் - 1/4 லிட்டர்
பால் - 1/2 லிட்டர்
வெள்ளரிக்காய் - 1 சிறு துண்டு
மாங்காய் - 1 சிறு துண்டு, (கிடைத்தால்)
சிறிய கேரட் - 1
பச்சை திராட்சை - 10
மாதுளம் முத்து (சிவப்பு) - 1/4 கப்
முந்திரி - 5
செர்ரி - 6
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:
சாதத்தை பால் சேர்த்து, குழைய வேக வைக்கவும். (பால் போதாதென்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).
வெந்த சாதத்தை மத்தால் நன்கு மசிக்கவும் (அரிசியின் உருவமே தெரியக் கூடாது).
ஆறிய பின் தயிர், உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.
கேரட்டை மெல்லியதாக துருவவும்.
வெள்ளரிக்காய், மாங்காய்களை பொடி துண்டுகளாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து, சிவந்ததும், துருவிய கேரட், வெள்ளரி, மாங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சாதத்தில் சேர்க்கவும்.
பச்சை திராட்சை, மாதுளம் முத்து, செர்ரி எல்லாம் சேர்த்து கலக்கவும்.
குறிப்புகள்:
விருப்பப்பட்டவர்கள் சிறிது வெண்ணெய் சேர்த்து கலக்கலாம். விருந்துகளில் பரிமாறினால் கண்ணுக்கு வண்ணமயமாகவும், நாவுக்கு சுவை மிக்கதாகவும் இருக்கும்.