தயிர் சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - மூன்று பேருக்கு தேவையான அளவு

சின்ன வெங்காயம் - 8 (மிகவும் பொடியாக நறுக்கியது)

தயிர் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

---------------------------

தாளிக்க :

--------------------------

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலை, உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி

வரமிளகாய் - 3

நீளமாக நறுக்கிய இஞ்சி - அரை இன்ச் துண்டு

கறிவேப்பிலை - 10 இலைகள்

செய்முறை:

சாதத்தில் வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக தாளித்து கலந்து வைத்த சாதத்தில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெங்காயம் மிகப்பொடியாக நறுக்கி சேர்க்கவும். பொதுவாக வெங்காயத்தையும் சேர்த்து தாளிப்போம். இம்முறையில் செய்தாலும் மிகவும் சுவையாக இடையிடையே கருகருக்கென வெங்காயமும் கடிக்க சூப்பராக இருக்கும்.

மதிய உணவிற்கு கொண்டு போவதாக இருந்தால் 1/2 கப் தயிரும் 1 கப் பாலும் சேர்த்து செய்து எடுத்து வையுங்கள். மதியத்திற்கு சரியாக இருக்கும். இல்லையென்றால் புளிப்பு கூடிவிடும்.

ஊறுகாய், அப்பளம் இதனுடன் இருந்தால் வேறென்ன வேண்டும் அவ்வளவு ருசியாச்சே.