தயிர் சாதம் (மற்றொரு முறை)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 ஆழாக்கு
வரமிளகாய் - 7
மாங்காய் (பொடியாக நறுக்கியது) - ஒரு சின்ன கப்
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
பால் - 500 மி.லி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாதத்தை குழைய வடித்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கிள்ளிய வரமிளகாய் தாளித்து மாங்காய் சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி தயிர், பால், உப்பு போட்டு கிளறவும்.