தயிர் சாதம் (ஈஸி முறை)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒன்றரை கப்
தயிர் - ஒரு கப்
பால் - மூன்று கப்
உப்பு - தேவையான அளவு
------------------------------
தாளிக்க:
-------------------------
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
முந்திரி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி,கொத்தமல்லி - கொஞ்சம் மேலே தூவ
செய்முறை:
சாதத்தை கொஞ்சம் குழைய வடித்து கொள்ளவும், வடித்த சூட்டோடு ஒரு கரண்டி கொண்டு நசுக்கவும்.
எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் போட்டு தாளித்து தயிரை கலக்கி ஊற்றி உடனே பாலையும் ஊற்றி இறக்கவும்.
இறக்கி சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
தயிர் சாதத்திற்கு தொட்டுகொள்ள அசைவம் ஃப்ரை நல்லா இருக்கும்.
வெஜிடேரியனாக இருந்தால் மசால் வடை, கேரட் பொரியல் (அ) பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிடவும்.