தயிர் சாதம் (ஆந்திரா)
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
தயிர் - 1 கப்
பால் - 1/4 கப்
துருவிய வெள்ளரி - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், கடுகு, உளுந்து, இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால், தயிர் சேர்த்து க்ரீம் போன்று சாப்டாக வரும் வரை நன்கு கலக்கவும்.
அதில் வெள்ளரி,உப்பு சேர்த்து கலந்து சாதத்தை சேர்க்கவும்.
கொத்தமல்லி தூவி, மோர் மிளகாயுடன் பரிமாறவும்.