தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 ஆழாக்கு
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
தயிர் - ஒரு சின்ன ஸ்பூன்
பால் - 500 மி.லி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
-------------------------
தாளிக்க:
----------------------------
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை கொஞ்சம் குழைவாக வடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி போட்டு சாதத்தில் கொட்டவும். சாதத்தை ஆறவிட்டு தயிர், பால் விட்டு கிளறவும்.
குறிப்புகள்:
இந்த சாதம் அதிகாலையில் செய்து வெளி ஊர்களுக்கு போகும்போது எடுத்து செல்லாம். மதியம் வரை நன்றாக இருக்கும்.
புளிக்காது. மாங்காய் இருந்தால் பொடியாக நறுக்கி எண்ணெயில் போட்டு வதக்கி சேர்த்து கொள்ளலாம். மாங்காய் சேர்த்தால் சீக்கிரம் சாதம் புளித்து விடும்.