தனியா ரைஸ்
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
தயிர் - அரை கப்
பாஸ்மதி - 2 டம்ளர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - 15
பச்சை மிளகாய் - 3
பூண்டு - ஒன்று
இஞ்சி - 2 துண்டு
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
அன்னாசி பூ - ஒன்று
செய்முறை:
கொத்தமல்லியை சுத்தம் செய்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்
பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த கொத்தமல்லி கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், தயிர் சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை கொட்டி கிளறவும். நீர் வற்றும் நேரத்தில் தம்மில் 15 நிமிடம் வைக்கவும்.
குறிப்புகள்:
வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.