தக்காளி பாத்
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப் அரிசியில் வடித்தது (உதிரியாக வடிக்கவும்)
நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 3/4 டீஸ்பூன்
----------------------
அரைக்க:-
----------------------
சின்ன வெங்காயம் - 10
தேங்காய்த் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4 (தேவைகேற்ப)
ஏலக்காய் - 1
இலவங்கம் - 2
பட்டை - சிறு துண்டு
-------------------------------------
அலங்கரிக்க:-
-----------------------------------
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.
சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியுடன் தக்காளியை போட்டு குலைந்து ஈரம் வற்றும் வரை வதக்கவும்.
இறுதியாக அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து மிதமான அணலில் வதக்கவும்.
இந்த கலவையிலேயே உப்பை போட்டுக் கலக்கவும்.
இப்போ இந்த கலவையை சாதத்தில் கொட்டி நன்றாக கிளறவும்.
நன்கு கலந்த சாதத்தை மிதமான் அணலில் வைத்து சாதம் சூடாகும் வரை கிளறவும்.
நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.