தக்காளி சாதம் (9)
0
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
வறுத்து அரைக்க:- (தண்ணீர் சேர்க்காமல் பொடியை போல்)
தனியா - 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்