தக்காளி சாதம் (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4 பல்

கறிவேப்பில்லை - 5 இலை

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

கடுகு - தாளிக்க

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். சாதத்தினை ஆறவிடவும்.

வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியினை நீளமாக நறுக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

பூண்டினை நசுக்கி கொள்ளவும். கொத்தமல்லியை பொடிதாக அரிந்து வைக்கவும்.

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் நசுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

மீதமான தீயில் தட்டு போட்டு மூடி வேகவிடவும். (தண்ணீர் ஊற்ற கூடாது)

கடைசியில் கொத்தமல்லி தூவவும்.

இப்பொழுது வேகவைத்து உள்ள சாதத்தில் இதனை சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

இத்துடன் தயிர் பச்சடி, அவித்த முட்டை அல்லது சிப்ஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.