தக்காளி சாதம் (7)
0
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு பெரிய கப்
பெரிய தக்காளி - ஒன்று
டொமேட்டோ பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை
மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி, டொமேட்டோ பேஸ்ட் போட்டு சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
நன்கு குழைய வதக்க வேண்டும். பின்னர் சாதத்தை போட்டு கிளறவும்.
குறிப்புகள்:
இதற்கு அவித்த முட்டை மற்றும் சிக்கன் நக்கட்ஸ், ஊறுகாய் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.