தக்காளி சாதம் (6)
தேவையான பொருட்கள்:
தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரிசி - 2 டம்ளர்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
-----------------------
தாளிக்க:
---------------
வரமிளகாய் - 8
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலைபருப்பு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
செய்முறை:
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை கழுவி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொள்ளவும்
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக சுருங்கும் வரை வதக்கவும்.
பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது தக்காளியை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
பின்னர் சாதத்தை கொட்டி நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.