தக்காளி சாதம் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - ஒன்னு

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சிபூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

அரிசி - ஒரு தம்ளர்

தக்காளி - 2

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தனி தூள் - ஒரு தேக்கரண்டி

தனியாதூள்,நெய் - விருப்பபட்டால்

-----------------------------------

தாளிக்க :

-----------------------------

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை,கிராம்பு,ஏலக்காய் - தலா ஒன்னு

கருவேப்பிலை - கொஞ்சம்

கொத்தமல்லி - கொஞ்சம்

செய்முறை:

அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.வெங்காயம்,,தக்காளியை நறுக்கி வைக்கவும்.பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும் பின் வெங்காயம் பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்,பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.மேலே கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி மூடி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

பிரசர் அடங்கியதும் திறந்து விருப்பபட்டால் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: