தக்காளி சாதம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைக் கிலோ (அரிசி அவரவர் விருப்பம் பாஸ்மதியிலும் செய்யலாம்)

தக்காளி - 6

பெரிய வெங்காயம் - 4

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

-------------------------

அரைக்க:

-------------------

இஞ்சி - 2 அங்குலம்

பூண்டு - முழுதாக ஒன்று

மல்லிதழை - ஒரு கைப்பிடி

பச்சைமிளகாய் - 6

------------------------

தாளிக்க:

---------------------

நெய் - 50 கிராம்

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 6

பிரிஞ்சி இலை - ஒன்று

ஏலக்காய் - 2

கல்பாசி பூ - சிறிது

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

இஞ்சியை தோல் சீவவும்.

பூண்டு, மல்லித்தழை, பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதில் அரைத்த மசாலா விழுது, உப்பு,மிளகாய்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.,

தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும்.

எலெக்ட்ரிக் குக்கர் பாத்திரத்தில் வதக்கிய தக்காளி கலவையை சேர்த்து அதோடு அரிசி அதற்கு ஏற்றாற்போல் தண்ணீர் (அரிசி ஒரு பங்கு என்றால் தண்ணீர் இரண்டு பங்கு) சேர்த்து நன்கு கலந்து எலெக்ட்ரிக் குக்கரில் வைக்கவும்.

மேலே மல்லித்தழை தூவவும். தக்காளி சாதம் ரெடி.

குறிப்புகள்:

ஆனியன் ரைத்தா, உருளைக்கிழங்கு குருமா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.