தக்காளி சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

தக்காளி - 5

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

உப்பு

மஞ்சள் தூள் கொத்தமல்லி

--------------------

தாளிக்க:

-----------------------

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

---------------------------------

வறுத்து பொடிக்க:

----------------------------------

மிளகாய் வற்றல் (விதை நீக்கியது) - 2

தனியா - அரை மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி

உளுந்து - கால் மேசைக்கரண்டி

வெந்தயம் - ஒரு சிட்டிகை

விரும்பினால் சேர்க்க: - வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை, எண்ணெயில் வறுத்த முந்திரி

செய்முறை:

வறுத்து பொடிக்க வேண்டிய அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்து வைக்கவும்.

சாதத்தை வடித்து எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு கலந்து வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும்.

சூடான சாதத்தில் இந்த கலவையை சேர்த்து சாதம் குழையாமல் கலந்து விடவும்.

இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு பொடி சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.

விரும்பினால் வறுத்த வேர்கடலை அல்லது முந்திரி தூவலாம். இதை நன்றாக அழுத்தி அரை மணி நேரம் வைத்து பின் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: