தக்காளி சாதம் (19)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - இரண்டு கப்

தக்காளி - ஐந்து

சின்ன வெங்காயம் - 2

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ஒரு பின்ச்

--------------------------

தாளிக்க:

---------------------------

ஆலிவ் ஆயில் - ஆறு தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - மூன்று

பூண்டு - மூன்று பல் (பொடியாக நறுக்கவும்)

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கவும்)

சோம்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு மேசைக்கரண்டி (இரண்டாக கிள்ளி வைக்கவும்)

நெய் (அ) பட்டர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்து உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைக்கவும். இடை இடையில் கிளறி விடவும்.

தக்காளி வெந்து கூட்டாகி எண்ணெய் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு ஆறியதும் ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நல்ல கிளறி இறக்கவும்.

கடைசியில் ஒரு தேக்கரண்டி பட்டர் (அ) நெய் போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

சோம்பு மணம் ரொம்ப நன்றாக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள இறால் ப்ரை, மட்டன் ப்ரை, வடை, ஊறுகாய்.