தக்காளி சாதம் (18)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரை கிலோ

தக்காளி - 300 கிராம்

பச்சை மிளகாய் - 5

பெரிய வெங்காயம் - 4

பட்டை - 4

லவங்கம் - 4

ஏலக்காய் - ஒன்று

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறிய அளவு

புதினா - சிறிது

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 100 மில்லி

செய்முறை:

முதலில் அரை மணி நேரம் முன்னதாக அரிசியை ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

சிறியதாக நறுக்கிய இஞ்சி, பூண்டை வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை இட்டு வதக்கவும்.

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போடவும்.

சுமார் 5 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த பின் ஊறவைத்த அரிசியை போடவும்.

பக்குவம் வந்த பின் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மூடி வைக்கவும்.

குறிப்புகள்: