தக்காளி சாதம் (17)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 500 கிராம்

தக்காளி - 1 கிலோ

இஞ்சி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 50 கிராம்

கடுகு - அரைத் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைபருப்பு - 2 தேக்கரண்டி

பட்டாணி - கால் மேசைக்கரண்டி

முந்திரி - 8

மிளகாய் வற்றல் - 2

வெங்காயம் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை பொல பொலவென்று சாதமாக வடித்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பட்டாணி, மிளகாய் வற்றல், முந்திரி போட்டுத் தாளிக்கவும்.

பின்பு, அதில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தக்காளி கூழையும், சிறிது உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.

அது நன்கு சேர்ந்து வந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு நன்கு கிளறவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்புகள்: