தக்காளி சாதம் (15)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
அரிந்த தக்காளி - ஒரு கப்
அரிந்த வெங்காயம் - அரை கப்
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
புதினா இலை - 30
தேங்காய்ப் பால் - கால் கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு சோம்பு போட்டு அது பொரிந்ததும் வெங்காயம், தக்காளி, புதினா இலைகள்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
தேங்காயையும் சீரகத்தையும் பூண்டு, இஞ்சியையும் சேர்த்து நன்கு அரைத்து இத்துடன் சேர்க்கவும்.
அத்துடன் தேங்காய்ப்பாலையும் ஊற்றி, ஊற வைத்த அரிசி, 2 கப் தண்ணீர், போதுமான உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.