தக்காளி சாதம் (13)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 1/2 கப்

தக்காளி - அரை கிலோ

பெரிய வெங்காயம் - ஒன்று (நடுத்தரமானது)

இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

பீன்ஸ் - 4

பச்சை மிளகாய் - 2

தனி மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காய் பால் - கால் கப்

காரட் - ஒன்று

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி

கல் உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - பத்து இலைகள்

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

பீன்ஸை துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, காரட் இரண்டையும் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கரம் மசாலாத்தூள் போடவும்.

அத்துடன் நறுக்கின வெங்காயம், பீன்ஸ், போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.

அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை மசித்து விடவும்.

பின்னர் அதில் 5 கப் தண்ணீர் மற்றும் கால் கப் தேங்காய் பால் ஊற்றி வேக விடவும். உப்பு சேர்க்கவும்.

கொதித்து ஆரம்பித்ததும் அரிசியை களைந்து போடவும்.

குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு வேகவிடவும்.

இரண்டு விசில் வந்ததும் இறக்கி சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சற்று கிளறி விடவும். சிறிது கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். தக்காளி சாதம் பொலபொலவென்று இருக்க வேண்டும். குழைந்துவிடக் கூடாது.

குறிப்புகள்: