தக்காளி சாதம் (12)
தேவையான பொருட்கள்:
அரிசி - இரண்டு கப்
பெரிய தக்காளி - நான்கு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - இரண்டு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு பின்ச்
-----------------------------
தாளிக்க:
--------------------------------
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு ( பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கவும்)
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
எண்ணெய் காய வைத்து தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் போட்டு தாளிக்கவும்.
தக்காளியை நறுக்கி போட்டு பச்சை மிளகாயையும் இரண்டாக ஒடித்து போட்டு வதக்கவும். அதில் உப்பு, சாம்பார் பொடி சிறிது மஞ்சள் தூள் போட்டு நன்றாக கிளறி தீயை குறைத்து வைத்து தக்காளியை வதக்கவும்.
மேலே எண்ணெய் மிதக்கும் வரை வேக விடவும். பிறகு இந்த கூட்டை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டி கிளறவும்.
குறிப்புகள்:
இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம், கருணை கிழங்கு சிப்ஸ் செய்து சாப்பிடவும்