தக்காளி சாதம் (11)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு

தக்காளி - 5

பச்சைமிளகாய் - 4

வெங்காயம் - 3

மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - ஒரு கிளாஸ்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

சோம்பு, பட்டை - ஒன்று

ஏலக்காய் - ஒன்று

கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கொத்து

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, ஏலக்காய் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

அதில் தக்காளி, கீறிய பச்சைமிளகாய் போட்டு வதங்கிய பிறகு அரிசியை கழுவி சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து தேங்காய்ப்பாலுடன் 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கிளறி குக்கரை மூடி 3 விசில் வைத்து, சிறுதீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்:

பாசுமதி அரிசியில் போட்டால் பிரியாணி போல் இருக்கும். தண்ணீரை ஒரு கிளாஸ் குறைத்து வைக்கவும்.