தக்காளி சாதம் (மற்றொரு முறை)
தேவையான பொருட்கள்:
அரிசி - 150 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 250 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பச்சை பட்டாணி - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
தயிர் - 3 தேக்கரண்டி
எண்ணெய் / நெய் - 50 ml
உப்பு - தேவையான அளவு
புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
தேங்காய், சோம்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒன்றாக அரைக்கவும்.
நெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை கருவேப்பில்லை போடவும்.
பொரிந்ததும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதிக்கி அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் வரை வதக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.