டோஃபு புலாவ்
தேவையான பொருட்கள்:
டோஃபு (சோயா பனீர்) - 250 கிராம்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
பட்டை - 2
லவங்கம் - 5
ஏலக்காய் - 5
பச்சை பட்டாணி - 100 கிராம்
கேரட், பீன்ஸ் - 100 கிராம்
நெய் + எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
தேங்காய் பால் - 2 கப் (விரும்பினால்)
செய்முறை:
அரிசி கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய் நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பீன்ஸ், கேரட்டை நறுக்கவும்.
டோஃபு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் + நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி, காய்கறிகள், பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கடைசியாக பனீர், ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அரிசியில் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும். (தேங்காய் பால் சேர்க்காதவர்கள் 4 கப் தண்ணீர் ஊற்றவும்)
குறிப்புகள்:
விரும்பினால் பச்சை மிளகாய் 2 மட்டும் சேர்த்து மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சேர்த்து வதக்கலாம். இதில் குடை மிளகாய், உருளை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.