டொமேட்டோ ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 8

சாதம் - ஒரு கப்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சைமிளகாய் - 3

பூண்டு - 10 பல்

மோர்மிளகாய் - 5

பெருங்காயத்தூள் - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி

கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தக்காளியை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து சாற்றை தனியாக வைக்கவும். சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். (பாதி விழுதாகவும் பாதி அரைப்படாமல் இருப்பது போலவும்.)

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பச்சைமிளகாய், மோர்மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து வதக்கவும்.

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும் தேவைக்கு உப்பையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் சுருண்டதும் தக்காளி சாற்றையும் பாதியாக அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.

மஞ்சள் தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

பின்னர் உதிரியாக வடித்த ஆற வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.

குறிப்புகள்:

அவித்த முட்டை, பொரித்த மீன் சிப்ஸ், வெள்ளைபூண்டு ஊறுகாய் ஆகிய பக்க உணவுகள் இதற்கு பொருந்தும்.

வேலைக்கு செல்லக்கூடியவர்கள் மசாலாவை வதக்கி பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். 10 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.