டிரைகலர் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - 3 கப்

தக்காளி - ஒன்று

பீட்ரூட் - பாதி

காரட் - பாதி

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மசாலா பொடி - கால் தேக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

துருவிய பனீர் - கால் கப்

துருவிய சீஸ் - கால் கப்

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

புதினா தழை - 5

மல்லித்தழை - சிறிதளவு

பச்சைமிளகாய் - ஒன்று

துருவிய தேங்காய் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - ஒரு பல்

செய்முறை:

முதல் கலர் சாதத்திற்கு (சிகப்பு வண்ண சாதம்):

தக்காளி, பீட்ரூட், காரட் ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

நெய்யை காயவைத்து அரைத்த கலவையை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி ஒரு கப் சாதத்தை அதனுடன் கலந்து விடவும்.

இரண்டாவது கலர் சாதத்திற்கு(வெண்மை நிற சாதம்):

துருவிய பனீர் மற்றும் சீஸ் ஆகியவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பும் அரைத்தேக்கரண்டி மிளகுத்தூளும் சேர்த்து சாதத்தில் இட்டு கிளறிக் கொள்ளவும்.

மூன்றாவது கலர் சாதம் (பச்சை வண்ண சாதம்):

புதினா இலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு ஆகிய ஆறு பொருட்களையும் நன்றாக அரைத்து. நெய்யை காயவைத்து அரைத்த விழுதைச்சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இதை ஒரு கப் சாதத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி சிவப்பு கலரில் இருக்கும் முதல் சாதத்தைப் பரவினாற் போல் போடவும்.

அதன் மேல் இரண்டாவதாக வெள்ளை சாதம், கடைசியில் பச்சை சாதம் ஒன்றன் மேல் ஒன்றைப் போட்டு அழுத்திவிடவும்.

கிண்ணத்துடன் பத்து நிமிடங்கள் ஆவியில் வைத்தெடுத்து ஆறவிட்டு தட்டில் கவிழ்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: