ஜீரா ரைஸ்
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 ஆ அல்லது 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு.
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
சாதத்தை உதிர், உதிராக வடித்து வைத்துக்கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை விடவும்.
நெய் உருகியதும் முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
வறுபட்டதும், பொடி உப்பு போட்டு சாதத்தில் கலக்கவும்.