ஜாதி நார்த்தங்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - 3 கப்

ஜாதி நார்த்தங்காய் - ஒன்று

மிளகாய் வற்றல் - 4

வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிய குண்டுமணி அளவு

கடுகு - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:.

சாதத்தை உதிர் உதிராக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நார்த்தங்காயை சாறு பிழிந்து அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் வற்றலை போட்டு வறுத்த பிறகு வெந்தயத்தையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை வதக்கிய பின்னர் பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு மேசைக்கரண்டி பொடியை போட்டு வதக்கி விடவும்.

பிறகு அதனுடன் நார்த்தங்காய் சாறை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

குறிப்புகள்: