ஜவ்வரிசி புலாவ் 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - ஒரு கப்

நிலக்கடலை - 50 கிராம்

வெங்காயம் - 2

கேரட் - 2

உருளைக்கிழங்கு - ஒன்று

குடைமிளகாய் - ஒன்று

தக்காளி - ஒன்று

கடுகு - ஒரு தேக்கரண்டி

தயிர் - ஒரு கப்

நெய் - 2 தேக்கரண்டி

பனீர் - 100 கிராம்

முந்திரி - 50 கிராம்

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 3 தேக்கரண்டி

தண்ணீர் - அரை லிட்டர்

உப்பு - தேவையானவை

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை ஒரு கப் தயிருடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 45 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

தக்காளி, காரட், உருளைக்கிழங்கு இவற்றை நீட்ட வாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாயையும் நீண்ட சைசில் அரிய வேண்டும்.

கடாயில் நெய் ஊற்றி சுட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், நறுக்கி வைத்த காய்கறிகள் இவற்றை வதக்கி உப்பு 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

பிறகு நிலக்கடலையை சுத்தம் செய்து உடைத்து, ஜவ்வரிசியுடன் (ஊறவைத்தது) சேர்த்து கடாயில் இருப்பனவற்றுடன் சேர்த்து கிளறவும்.

தனியாக பனீரை எண்ணெயில் பொரித்து அதையும் இதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

கறிவேப்பிலை தூவினால் மணம் கூடும். ஜவ்வரிசி ஊறுவதற்கு மட்டுமே அதிக நேரம் தேவை. ஊறிவிட்டால் 15 நிமிடங்களில் செய்து விடலாம்.

குறிப்புகள்: