ஜவ்வரிசி புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்

பாசிப்பருப்பு - 250 கிராம்

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 5

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

பச்சை மிளகாய் - 5

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.

பாசிப்பருப்பை அரை வேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு

உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வதங்கிய பிறகு ஊறிய ஜவ்வரிசி வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: