சோள சோறு
தேவையான பொருட்கள்:
சோளம் - 1 டம்ளர்,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
சோளத்தை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.
6 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சோளத்தை போட்டு, கிளறி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
குக்கரில் வைப்பதானால் சோளம், உப்பு போட்டு கலந்த பிறகு, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
வெந்த பிறகு, எடுத்து கரண்டியாலோ, மத்தாலோ லேசாக மசிக்கவும்.
குறிப்புகள்:
சூடாக குழம்புடன் தொட்டு சாப்பிடலாம்.
உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மோர் விட்டு கரைத்தும் குடிக்கலாம். (உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்).
தொட்டுக் கொள்ள கார குழம்பு, மோர் குழம்பு பொருத்தமாக இருக்கும்.