சோயா புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

சோயா உருண்டைகள் - அரை கப்

நறுக்கிய வெங்காயம் - கால் கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

தயிர் - அரை கப்

எண்ணெய், நெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.

குக்கரில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் சிம்’மில் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: