சேமியா சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 500 கிராம்

பால் - 600 மில்லி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி - ஒரு துண்டு

காரட் - 4

தேங்காய் - ஒன்று

பச்சை மிளகாய் - 5

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு சுட வைக்கவும். அதில் சேமியாவை போட்டு உடனே எடுத்து விடவும்.

பிறகு பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அதில் சேமியாவை போட்டு மோர் சிறிது ஊற்றவும். 5 மணிநேரம் வைத்திருக்கவும்.

தேங்காய், காரட், இஞ்சி இவைகளை துருவி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வெடிக்க விடவும்.

தேங்காய்த் துருவல், காரட், இஞ்சி துருவல்களை கொட்டி 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு உப்பு மற்றும் வேக வைத்து எடுத்துள்ள சேமியாவை கலவையில் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

குறிப்புகள்: