சூப்பர் ஈசி புதினா ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கட்டு

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1/2 tsp

வெங்காயம் - 1

தக்காளி - 1

சாதம் - 2 கப்

உப்பு, வெண்ணை - தேவையான அளவு

செய்முறை:

புதினாவை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து நீரை பிழிந்து விட்டு சோம்பு, இஞ்சி பூண்டு பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் சுத்தி எடுக்கவும்.

வெண்ணை சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது உப்பு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும்.

பிறகு வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.

ஒன்றாக நன்கு கலந்ததும் அடுப்பை அனைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்க்கு தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தக்காளிக்கு பதிலாக சிறிதளவு புளி சேர்த்தும் செய்துப் பார்க்கலாம்.

இதனுடம் எந்த காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். காய்களை மிகவும் பொடியாக நறுக்கி கொண்டு வெங்காயம் வதங்கியதும் சேர்த்து வதக்கவும்.

வெண்ணைக்கு பதில் நெய் அல்லது எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

அரைக்கும் போது முதலில் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து அரைத்துவிட்டு பின்பு புதினா மற்றும் தக்காளி சேர்க்கவும்.