சீஸ் வெஜிடபுள் சாதம்
0
தேவையான பொருட்கள்:
சூடான சாதம் - முக்கால் கப்
சீஸ் க்யூப் - ஒன்று
கேரட், பீன்ஸ், பீஸ் - 3 தேக்கரண்டி
செய்முறை:
கேரட், பீன்ஸ், பீஸ் மூன்றையும் வேக வைத்து 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்துடன் சீஸ் க்யூப்பை போட்டு நன்கு மசிக்கவும். அதனுடன் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
குறிப்புகள்:
குழந்தைகளுக்கு பிடித்த ருசியில் சீஸ் வெஜிடபுள் சாதம் தயார்.