சீரக சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

-----------------

அரைக்க :

-------------

சீரகம் - ஒரு தேக்கரண்டி

வர மிளகாய் - 2

--------------

தாளிக்க :

------------

பெரிய வெங்காயம் - ஒன்று

கடுகு - தாளிக்க

பூண்டு - 5 பல்

வேர்கடலை - சிறிது

உளுத்தம் பருப்பு - சிறிது

கடலை பருப்பு - சிறிது

மல்லி தழை - சிறிது

எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயத்தையும், மல்லி தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை போட்டு வறுக்கவும்.

நன்கு சிவந்தததும்

வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து தாளிக்கவும். இதற்கிடையில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அரைத்த பொடியையும் சிறிது மல்லி தழையையும் சேர்த்து தாளித்து தேவையான உப்பை சேர்க்கவும்.

நன்கு அனைத்தும் கலவையாகும்படி மிதமான சூட்டில் வதக்கவும். இல்லை எனில் சில சமயம் கருகிய வாசம் வந்துவிடும்.

சூடான சாதத்தை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். மீதமுள்ள மல்லி தழையை தூவவும்.

குறிப்புகள்: