சீரக கஞ்சி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - முக்கால் டம்ளர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவியது - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - ஒரு மேசை கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
செய்முறை:
சின்ன வெங்காயம் 6, சீரகம், தேங்காய் இவற்றை அரைத்து கொள்ள வேண்டும்.
அரிசியை களைந்து பத்து நிமிடம் ஊற வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் நான்கு டம்ளர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு, தனியாதூள், வெந்தயம் போட்டு கலக்கி குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும். தீயை சிம்மில் வித்து விடனும் இல்லை என்றால் தெரிக்கும்.
வெந்த கஞ்சியில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் ஒரு ஸ்பூன் நெய்யில் மீதி உள்ள நான்கு சின்ன வெங்காயத்தை நல்ல வதக்கி வெந்த கஞ்சியில் ஊற்றி இறக்கவும்.
குறிப்புகள்:
இந்த கஞ்சி குடித்து கூட நார்த்தங்காய் ஊறுகாய் (அ) கீரின் துவையல் சாப்பிடுங்கள்.
தேங்கயாய் பால் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள், டயட்டில் உள்ளவர்கள் கடைசியில் ஊற்ற வேண்டாம். அரைத்து ஊற்றியதே போதும்.